மோடிக்கு குலாம்நபி ஆசாத் கடிதம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு...சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடிக்கு குலாம்நபி ஆசாத் கடிதம் எழுதி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 2 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:–

தாக்குதல் அதிகரிப்பு

பா.ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் பதவி ஏற்றது முதல் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அச்சுறுத்தல், மிரட்டல்கள், கும்பல் ரீதியான வன்முறை போன்றவை அதிகம் நடக்கின்றன. இந்த தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது.

அண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் லடேகர் மாவட்டத்தில் கால்நடை வியாபாரிகள் 2 பேர் மதவெறியர்களால் சித்ரவதை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு உள்ளனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுமாதிரியான கொடூர சம்பவங்கள் மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் இந்தியாவில் ஜனநாயகம் இல்லையோ என்னும் கருத்தை உலகின் சில பகுதிகளில் உருவாக்கிவிடும் என்பதையும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நடவடிக்கை எடுங்கள்

பெரும்பான்மையானோரின் கருத்துகள் ஜனநாயகத்தின் மீது பரப்பப்படுவதுடன் வேண்டுமென்றே திணிக்கவும் படுகிறது. இது நமது ஜனநாயகம், பன்முகத்தன்மை, சமூக ஒற்றுமை, அமைதி, நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் வேண்டுமென்றே சமூக ரீதியாக நாட்டை பிரித்தாளும் விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதை தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

இனியும் தாமதம் இன்றி இதுபோன்ற தாக்குதல்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

93a034b1-8f1d-4e48-9c92-d4fb1af07b1f_S_secvpf.gif
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.