முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தலமையில் வாகன சோதனை: மதுபாட்டில்கள் பறிமுதல்திருத்துறைப்பூண்டி அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது 406 புதுச்சேரி மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கையில் திருத்துறைப்பூண்டி சட்டசபை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டுகள் சண்முகசுந்தரம், கல்யாணசுந்தரம், செல்வகுமார் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரைக்காலில் இருந்து வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 406 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சிவக்கொல்லையை சேர்ந்த ஜெகபர்தீன்(வயது 40) என்பதும், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகபர்தீனை கைது செய்தனர். மேலும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.