வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்: நோக்கியா, பிளாக்பெர்ரி மொபைல்களில் இனி வாட்ஸ்ஆப் சேவை இல்லைபிரபல சமூக வலைதளமான வாட்ஸ்ஆப் இனி தங்கள் சேவையை நோக்கியா, பிளாக்பெர்ரி போன்ற மொபைல்களில் அளிக்க போவதில்லை என அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மெஸ்ஸெஞ்சர் சேவை, பிளாக்பெர்ரி மொபைல் உட்பட பல மொபைல்களில் இந்த வருட இறுதியுடன் காலவதியாக உள்ளது. நோக்கியா சிம்பியன் S40, சிம்பியன் S60 பதிப்புகளில் மற்றும் ஆண்ட்ராய்டு 2.1, 2.2, விண்டோஸ் ஃபோன் 7.1 OS கொண்ட மொபைல்களில் இந்த சேவையை நிறுத்த உள்ளது.

இது குறித்த அறிவிப்பு வாட்ஸ்ஆப் வலைப்பதிவில் வெளியாகி உள்ளது. 2009 இல் வாட்ஸ்ஆப் அறிமுகம் ஆகும் போது சந்தை நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது. அப்பொழுது, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். போன்றவை சந்தையில் 25 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் நோக்கியா, பிளாக்பெர்ரி 70 சதவீதம் இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்வதிலும் இந்த மொபைல்களில் பல பிரச்சனைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கடினமான முடிவை எடுத்திருப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் குறிப்பிடப்பட்ட அந்த கருவிகளில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.