பழைய வீட்டை இடித்த போது பரிதாபம் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலிதிருத்துறைப்பூண்டி அருகே பழைய வீட்டை இடித்த போது மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

தொழிலாளி பலி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி குரும்பல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் ரமேஷ். விவசாயி. இவர் அதே தெருவில் பழைய தொகுப்பு வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருந்தார். அந்த வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்திருந்தார். அதன்படி பழைய வீட்டை இடிக்கும் பணி நேற்று நடந்தது. இதில் அதே தெருவை சேர்ந்த குமார் என்பவருடைய மகன் கட்டிட தொழிலாளியான ரஞ்சித் (வயது20) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித் உடல் நசுங்கி பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், பெர்னாண்டஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரான ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.