‘@’ குறியீட்டின் அறிமுகம். எப்படி வந்து என்று தெரியுமா?தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் '@' குறியீட்டின் கதை தெரியுமா?

மின் அஞ்சல் மற்றும் இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் @ குறியீடு, 1971-க்குப் பிறகே பரவலான புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

இந்தக் குறியீடு ஒரு காலத்தில் தெளிவற்ற சின்னமாக இருந்தது. அப்போது கணக்கு ஏட்டுப் பதிவாளர்களால் மட்டுமே இந்த @ குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நிலையை மாற்றி, இந்த மின்னணு யுகத்தில் அதனை அனைவர் மத்தியிலும் புழக்கத்துக்குக் கொண்டுவந்தவர் ரே டாம்லின்சன் ஆவார்.

தனது அலுவலகத்தில் மின்னஞ்சலைப் பரிமாற்றிக் கொள்வதற்கு, அவர் 1971-ல் இந்த @ குறியீட்டைப் பயன்படுத்தினார். மின்னஞ்சல் அனுப்புபவரின் பெயருக்கும் சென்றடையும் விலாசத்துக்கும் இடையே இது அப்போது இடப்பட்டது.

முன்பு கணினித் தொழில்நுட்பத்தில் @ குறியீட்டின் பயன்பாடு மிகவும் அரிதாகவே இருந்தது. எனவே, கணினியில் பயன்படுத்தப்பட்ட புரொகிராம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றில் @ குறியீட்டின் பயன்பாடு சிக்கலை ஏற்படுத்தவில்லை.

பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில் @ குறியீட்டைக் காணமுடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்பே தட்டச்சு எந்திரங்களின் பயன்பாட்டில் @ இருந்துள்ளது என நூலாசிரியர் ஹெய்த் ஹவுஸ்டன் கூறுகிறார். பின்னர் அது கணினி கீபோர்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

வர்த்தகக் கணக்குகளில், எவ்வளவு பொருள், என்ன விலையில் உள்ளன என்பதை சுருக்கமாகத் தெரிவிக்கும் ஒரு குறியீடாக @ பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ஹெய்த், முன்பு வர்த்தக நோக்கத்துக்காக கணினி பயன்படுத்தப்பட்டதால், அதில் @ குறியீடும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்.

ஆனாலும் பல்வேறு நாடுகளில், பல்வேறு விஷயங்களைக் குறிப்பதாக @ குறியீடு உள்ளது.

துருக்கியில் இக்குறியீடு ரோஜாப் பூவையும், நார்வேயில் பன்றியின் வாலையும், கிரீஸ் நாட்டில் தாரா பறவையின் குஞ்சையும், அங்கேரியில் புழுவையும் குறிக்கிறது.
பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இது அரோபா எனப்படும் எடையை அளவீடு செய்யும் அலகாகக் கருதப்படுகிறது.

இத்தாலியில் இக்குறியீடு அம்போரா என அழைக்கப்படுகிறது. அங்கு, பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்படும் நீண்ட கழுத்து உடைய மண்பாண்ட ஜாடிகளை குறிப்பதாக உள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டில் இக்குறியீடு, வர்த்தகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன என்று இத்தாலிய கல்வி அறிஞரான ஜார்ஜியோ ஸ்டாபில் கூறுகிறார்.

இப்படி, சிறிய @ குறியீட்டுக்குப்பின்னே அனேக சங்கதிகள் உள்ளன!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.