இந்துத்துவா கொள்கையை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய போவதாக ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சுஇந்துத்துவா கொள்கையை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய போவதாக ராஜஸ்தான் அமைச்சர் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் ஞானிகளின் வாழ்க்கை வரலாறு தொடக்கப்பள்ளி பாட புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் தலைவர் கண்ஹையா குமார் போன்றவர்கள் ராஜஸ்தானில் பிறக்காமல் இருக்கும் வண்ணம் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்றும் வாசுதேவ் கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் கண்ஹையா குமார் தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு டெல்லி நீதிமன்றம் 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே எட்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு பிராந்திய உணர்வுகளுடன் கூடிய படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெண் விடுதலை தொடர்பான கருத்துகளும், இந்தி பாட புத்தகங்களில் உருது மொழி வாசகங்களும் நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த 2014-ம் ஆண்டைய அரசின் ஆய்வறிக்கையின் படி 3-ம் வகுப்பு மாணவர்களின் 45 சதவீதத்தினர் மட்டுமே எழுத்துக்களை வாசிக்கும் திறன் கொண்டவர்களாகவும், 2-ம் வகுப்பு மாணவர்களில் 20 சதவீதம் பேர் எழுத்துக்களை வாசிக்க இயலாதவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.