திருத்துறைப்பூண்டி அகிம்ஷா தர்கா எதிரில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நட்சத்திர ஆமைகள்திருத்துறைப்பூண்டி குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நட்சத்திர ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நட்சத்திர ஆமைகள் ஒப்படைப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் அகிம்ஷா தர்கா எதிரில் உள்ள குளத்தில் நட்சத்திர ஆமைகள் மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது குளத்தில் அரியவகை நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த ஆமைகளை பிடித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஆமைகளை மர்மநபர் யாரோ கடலில் இருந்து கடத்தி வந்தபோது போலீசாருக்கு பயந்து குளத்தில் வீசினார்களா? அல்லது குளத்தில் போட்டுவிட்டு பின்பு எடுத்து வெளிநாட்டிற்கு கடத்தி செல்லலாம் என்று நினைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 3 பெரிய ஆமைகள், 10 குட்டி ஆமைகள் என மொத்தம் 13 ஆமைகளையும் வனத்துறை காவலர் குமார், வேட்டைத்தடுப்பு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆமைகளின் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.