‘கொம்பா முளைச்சிருக்கு?’ என கேட்க முடியாது கர்நாடகா பெண்ணுக்கு தலையில் முளைத்தது கொம்புகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தலையில் முளைத்த கொம்புடன் சுற்றித்திரியும் பெண்ணை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த அப்பெண் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். பொதுவாக மாடு, ஆடு, மான் போன்ற விலங்குகளுக்கு தலையில் கொம்பு முளைத்திருக்கும். கொம்பு முளைத்த தலையுடன் அரக்கர்கள் வருவதை சினிமாவில் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் அப்படி யாரையும்  பார்த்திருக்க முடியாது. அதனால் தான் யாராவது அராஜமாக, ஆணவமாக பேசினால், அவருக்கு என்ன தலையில் கொம்பா முளைச்சிருக்கு? என்று சொல்வதும் உண்டு. சிறுவயதில் தலையோடு தலை முட்டிக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்று குழந்தைகளை பயமுறுத்துவதும் உண்டு.

இந்நிலையில், கொம்பு முளைத்த பெண் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டம் புனஞ்சனூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒசபோடு காலனி கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மா(50). மலைவாசியான இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு உச்சந்தலையில் சிறிய மருவுபோல் தோன்றியுள்ளது. அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்களில் அந்த மருவு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டு கொம்பு போல் வளர்ந்துவிட்டது. இதனால் அதிர்ச்சிடைந்த அப்பெண் டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற சென்றார். ஆனால் இதற்கு என்ன சிகிச்சை அளிப்பது, எப்படி அளிப்பது என்று டாக்டர்களே திணறியுள்ளனர். 6 மாதம் இந்த கொம்பு தலையில் இருப்பதாகவும் பிறகு தானாக உதிர்ந்துவிடுவதாகவும், மீண்டும் கொம்பு முளைப்பதாகவும் கூறும் மாதம்மா மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளார். அறிவியல் ரீதியாக இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டதால் சிகிச்சைக்கு வழியின்றி மாதம்மா தவித்து வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.