திருச்சியில் வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப் – இன்ஸ்பெக்டர்-ஏட்டுதிருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் டிரைவரான ஏட்டு சரவணன் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதாவுக்கும், ஏட்டு சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரோந்து முடிந்து அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் வாங்கி வைத்து இருந்த வாழைப்பழத்தை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா எடுத்து சாப்பிட்டார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி, மாறி கடித்து கொண்டனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) டி.ஐ.ஜி. அருண், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா, ஏட்டு சரவணன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.