சவூதி அரேபியாவில் லட்சக்கணக்கான பேரீச்சம் மரங்கள் நிறைந்த உலகின் நீண்ட பாலைவன சோலைசவூதி அரேபியா பேரிச்சம் பழ ஏற்றுமதியில் உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. பெட்ரோலும் பாலைவனமும் நிறைந்த  இந்நாட்டில் விவாசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கோதுமை, தக்காளி, தர்பூசணி, உருளைகிழங்கு உள்ளிட்ட பல்வேறு விவசாய பொருட்கள் லட்சக்கணகான டன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பேரீச்சம் பழ விவசாயத்தில் பெரும்பாலானோர் ஈடுபடுகிறனர். இதனை முதன்மைபடுத்தும் விதமாக சவூதியில் பல்வேறு பகுதிகள் பேரீச்சம் பழ திருவிழாக்கள் நடைபெறும்.

இந்நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள அல் அஹ்ஷா பகுதி பேரீச்சம் மரங்கள் நிறைந்த உலகின் மிகபெரிய பாலைவன சோலைகளில் ஒன்றாகும். இப்பகுதியில் 10 ஆயிரம்  ஹெக்டர் நில பரப்பளவில் லட்சக்கணக்கான பேரீச்சம் மரங்கள் உள்ளன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பேரீச்சம் மரங்களால் நிரம்பி வழிகிறது. சவூதி அரேபியாவில் ஒட்டுமொத்த பேரீச்சம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய இடம்பெறுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.