தகவலறியும் உரிமை சட்டத்தின்படி பொதுமக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தரவேண்டும்தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அமைச்சர்களின் கடமை. அமைச்சர்களுக்கு செய்து வைக்கப்படும் ‘ரகசிய பதவிப் பிரமாணம்’ நடைமுறையை ‘வெளிப்படை பதவிப் பிரமாணம்’ என மாற்றப்பட வேண்டும்’’ என்று மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. அகமது நகரைச் சேர்ந்த ஹேமந்த் தாகே என்பவர் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘அமைச்சரும், இணை அமைச்சரும் மக்களை எந்த நேரத்தில் சந்திக்கிறார்கள்?’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சட்ட அமைச்சகம் அளித்த பதிலில், ‘இதுபற்றி அமைச்சரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மத்திய தகவலறியும் ஆணையத்திடம் இதுபற்றி தாகே மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்து தகவலறியும் ஆணையர் தர் ஆச்சார்யலு தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தொடர்புக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 19(1)(அ)ன் கீழ், மத்திய, மாநில அமைச்சர்கள் அனைவரும் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது கடமையாகும்.  தகவலறியும் உரிமை ஆணையத்தின் அனுமதி பெற்ற விஷயங்கள் தொடர்பான மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதில் அளிக்க வேண்டும்.  பல்வேறு துறைகள் ஒரு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகயில், அத்துறைகள் மீது மக்கள் எழுப்பும் புகார்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டியது அமைச்சரின் கடமை.

சாக்கு, போக்கு கூறி தட்டிக் கழிக்காமல், தகவல் தொடர்பு அதிகாரியை நியமித்து அனைத்து அமைச்சகங்களும் மக்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டியது கட்டாயமாகும். பதவி ஏற்கும்போது, ரகசிய பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைக் காட்டிலும் வெளிப்படை பதவிப் பிரமாணம் என்று கூறினால், தகவலறியும் உரிமைக்கு அமைச்சர்கள் மதிப்பு அளிப்பார்கள். புராண காலத்தில் ‘ஆராய்ச்சி மணி’ நடைமுறை இருந்தபோது, மக்களின் புகாருக்கு மன்னர் நேரில் தோன்றி பதில் அளித்ததை அமைச்சர்கள் உணர வேண்டும். இவ்வாறு ஆச்சார்யலு கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.