புனே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்புபுனே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புனே நகரின் கோரேகாவ் பார்க் பகுதியில் உள்ள ஜெர்மனி பேக்கரி வளாகத்தில் கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. இந்த சம்பவத்தில் மொத்தம் 17 பேர் பலியானார்கள். வெளிநாட்டினர் உள்பட 58 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதற்கு மூளையாக செயல்பட்ட ‘இந்தியன் முஜாஹூதீன்’ அமைப்பை சேர்ந்த ஹிமாயத் பெய்க் என்பவரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த புனே செசன்சு கோர்ட்டு அவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை உறுதிபடுத்த கோரி மாநில அரசு தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளையில், தனக்கு கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து ஹிமாய்த் பெய்க்கும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வெளியாகியது. இதற்காக ஐகோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு ஹிமாயத் பெய்க்கின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் இந்திய வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.