முஹம்மத் நபியை கைது செய்து சிறையில் அடைப்பேன்! அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!எகிப்து நாட்டின் சட்ட அமைச்சரான அஹ்மத் அல்- ஜிந்த் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, எகிப்து நாட்டு சட்டங்களை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் ‘எகிப்து நாட்டு சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்’ என கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ‘எகிப்து நாட்டு சட்டத்தை இஸ்லாமிய இறைதூதரான முகமது மீறினால் கூட அவரை கைது செய்து சிறையில் அடைப்பேன்’ என வாய் தவறி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார். ஆனால் இந்த கருத்தை கூறிய மறுவினாடியே தனது தவறை உணர்ந்து ‘இறைதுதர் என்னை மன்னிக்க வேண்டும். வாய் தவறி இந்த வார்த்தை வந்துவிட்டது’ என அந்த நிமிடமே மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்த தொலைக்காட்சி பேட்டியை பார்த்த பொதுமக்கள் பலத்த கண்டனங்களை எழுப்பியதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று தனது கைப்பட ஒரு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
ஆனால் பொதுமக்களின் மத்தியில் எதிர்ப்பலைகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து எகிப்து நாட்டின் பிரதமரான சரீஃப் இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தற்போது சட்ட அமைச்சராக பதவி வகித்து வரும் அஹ்மத் அல்- ஜிந்த் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அதில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.