சாதிய வெறியின் உச்சகட்டம் !!!… பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த கிராம பஞ்சாயத்துஜார்கண்ட் மாநிலம் தாட்கிதி பஞ்சாயத்துகுட்பட்ட கலயான்பூர்  கிராமம் இது ஸ்டீல் நகர் பொகாராவில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊரைச் சேர்ந்த 35 வயது பழங்குடியின பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வர் மன்சிகி ( வயது 40), சுரேந்திர மன்சிகி (30) பீம் மன்சிகி(30) கோபிசந்த் மன்சிகி (28) ஆகியோர் 4 பேர் மீது ஜாரித் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில் பீம் , கோபிசந்த் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். அந்த பெண்  கதவை திறக்கவில்லை பின்னர் இருவரும் கதவை உடைத்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.அந்த பெண் கதவை திறந்ததும் அவரை பீமும் கோபிசந்தும் அவரது கணவ்ர் கண்முன்னாலேயே தரதவென தெருவில்  இழுத்து வந்து உள்ளனர். அவர்களை தடுத்த கணவரை தாக்கி உள்ளனர்.

அந்த பெண்ணை கல்யான்பூர் சமூதாய கூடத்திற்கு இழுத்துச் என்று உள்ளனர். அங்கு அந்த கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூடி இருந்தனர்.அங்குவைத்து அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து அவரை நிர்வாணபடுத்தி அவரது தலையை மொட்டை அடித்னர். சில ஆண்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்தனர்.   அந்த பெண்  கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சூனியக்காரி எனவும் குற்றம்சாட்டினர்

பின்னர் அந்த பெண்ணை கட்டாயபடுத்தி சிறுநீரை குடிக்க வைத்து உள்ளனர். என புகாரில் கூறபட்டு உள்ளது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று  குற்றவாளிகளை தேடினர் . குற்றவாளிகள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.  போலீசார்  கற்பழிப்பு, பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளுதல்.கொலை மிரட்டல்,கிரிமினல் சதி,சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்,அத்துமீறுதல்,அத்துமீறி காயம் ஏற்படுத்துதல்,வாழ்க்கை முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியான குற்றங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யபட்டு உள்ளது.

விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.