மரணம் என்ற சொல்லின் அர்த்தம் கூட எனக்கு தெரியாது?..... உலகே ஓர் நாள் என் குரல் கேட்கும் நிச்சயமாக .......மரணம்...
அந்த சொல்லின்
அர்த்தம் கூட எனக்கு இன்னும்
புரியவில்லை..
அதற்குள் நான் மரணித்து விட்டேன்

எதற்காக இந்த மரணம் என்பதும்
இன்னும் விளங்கிடவில்லை..

தந்தையின் கை பிடித்து
நடைபழகும் வயதினிலே
குண்டு ஒன்று மார்பு துளைத்து
மூச்சடங்கி கிடக்கின்றேன்...

தாயின் தாலாட்டு கேட்டு
தூங்கும் வயதில்...
மயானத்தின் அமைதியில்
நிரந்தரமாக தூங்கப்போகிறேனே...

சொந்தங்களின் தோளில் தூக்கி
கொஞ்சி விளையாடும் வயதில்
சொந்தங்கள் நால்வர்
தூக்கிசெல்லும் நிலையில் உள்ளேனே...

தலையில் பூச்சூடி அழகு
பார்பவர்கள் எல்லாம்
என் உடலில் பூவைத்து
அழுதுகொண்டிருக்கிறார்களே...

என்னை சுற்றி அழுது கொண்டிருக்கும்
என் நண்பர்களுக்கு தெரியவில்லை
நாளை அவர்களுக்கும் இதே நிலைதான் என்று...

இன்னும் புரியவில்லை
இரக்கமின்றி கொல்வதற்கு
நாங்கள் என்ன பாவம்
செய்தோமென்று..

இஸ்ரேலின் தாக்குதலில் உயிர் துறந்த ஒரு பாலஸ்தீனிய ஆன்மா...

\பாலஸ்தீன விடுதலைக்கு நாம் தூஆ செய்வோம்.....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.