முத்துப்பேட்டையில் குப்பையில் ஏற்பட்ட தீயில் வேன் எரிந்து சாம்பல்முத்துப்பேட்டையில் உள்ள குப்பை குவியலில் ஏற்பட்ட தீயில் வேன் எரிந்து சாம்பலானது. முத்துப்பேட்டை கொத்பா பள்ளி எதிர்புறம் உள்ள கோரையாற்று ஆண்கள் படித்துறையில் எந்த நேரமும் குப்பை குவியல் கிடக்கும். இதை அப்பகுதியை சேர்ந்த சிலர் தீயிட்டு கொழுத்தினர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிலூர் பைபாசில் குப்பை கிடங்கில் வைக்கப்பட்ட தீயால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற 5 வயது சிறுமி பலியானார். அவரது தாய் மற்றும் உறவினர் படுகாயமடைந்தனர்.

இதனால் முத்துப்பேட்டை பகுதியில் குப்பைக்கு தீ வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் கொத்பா பள்ளி எதிர்புறம் உள்ள இந்த குப்பை குவியலுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால் தீ பரவி அருகில் இருந்த கார் கொட்டகைக்கு பரவியது. இதில் அப்பகுதியை சேர்ந்த ராஜ்முகம்மது என்பவருக்கு சொந்தமான அங்கிருந்த வேன் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியை ேசர்ந்த வாலிபர்கள் பலமணி நேரம் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் கொட்டாகை முழுவதும் எரிந்து வேனும் தீயில் கருகியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.