திருத்துறைப்பூண்டி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நருவுளி களப்பாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நருவுளி களப்பாள் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 72 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை 68 மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனர். இவர்களில் சுபா, தீபிகா, புவனேஸ்வரி உள்ளிட்ட 4 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மற்ற 64 மாணவ, மாணவிகளையும் சத்துணவு அமைப்பாளர் ராஜேஸ்வரி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். தலைமை மருத்துவர் வெற்றிச்செல்வி தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.