பசுமை வீடு வழங்க கோப்பு தயாரித்த உதவி செயற்பொறியாளரை முற்றுகையிட்ட முத்துப்பேட்டை திமுகவினர்முத்துப்பேட்டை பேரூராட்சியில் பசுமை வீடு வழங்க கோப்பு தயார் செய்ய வந்த உதவி செயற்பொறியாளரை திமுகவினர் முற்றுகையிட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நேற்று தஞ்சை பேரூராட்சிகள் உதவி இயக்குனரின் செயற்பொறியாளர் ராஜா வந்திருந்தார். அவர் ஒரு தனி அறையில் பேரூராட்சி அதிகாரிகளுடன் கோப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த திமுக கவுன்சிலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது பேரூராட்சி சார்பில் 43 பயனாளிகளுக்கு பசுமை வீடு வழங்குவதற்காக கோப்புகள் தயாரித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திமுகவினருக்கு கவுன்சிலர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திமுக நகர செயலாளரும், மாவட்ட துணை செயலாளருமான கார்த்திக், பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், ஜெகபருல்லா, நிர்வாகி அன்பன் ஆகியோர் செயற்பொறியாளர் ராஜாவை முற்றுகையிட்டனர் பின்னர் தேர்தல் விதிமுறை மீறும் வகையில் பசுமை வீட்டு திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு எப்படி ஆணை தயார் செய்ய முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செயற்பொறியாளர் ராஜா, ஏற்கனவே வழங்கப்பட்ட ஆணை என்று கூறி ஒரு பயனாளியின் விண்ணப்பத்தை திமுகவினரிடம் காண்பித்தார். இதில் பிப்ரவரி 29ம் தேதியிடப்பட்டிருந்தது. இதையடுத்து எங்களுக்கு தெரியாமல் எப்படி ஆணை உத்தரவு தயார் செய்ய முடியும், நீங்கள் வேண்டும் என்றே பழைய தேதியில் குறிப்பிட்டு தயார் செய்வதாக திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். இதற்கு ராஜா பதில் சொல்ல முடியாமல் காரில் ஏறி சென்றார். இதுகுறித்து கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் அய்யப்பன், ஜெகபருல்லா ஆகியோர் கூறுகையில், பேரூராட்சியில் பசுமை வீடு திட்டத்துக்காக பல மாதங்களுக்கு முன் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. பயனாளிகள் தேர்வு இன்னும் முடிக்கவில்லை. இந்நிலையில் 43 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆணை பிறப்பித்துள்ளதாக சென்ற மாதம் 29ம் தேதியை குறிப்பிட்டு போலியாக அதிகாரிகள் கோப்புகள் தயார் செய்துள்ளனர். இது தேர்தல் விதிமுறைக்கு முரண்பாடான செயல். எனவே தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

 

untitled
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.