பாரத் மாதா கீ ஜெய்’ என மெகபூபா சொல்வாரா?: பாஜவுக்கு ஆம் ஆத்மி கேள்வி‘பாரத் மாதா கீ ஜெய்’ என மெகபூபா சொல்வாரா என பாஜவுக்கு ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீரில் மீண்டும் பிடிபி-பாஜ கூட்டணியுடன் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்க உள்ளார். ஆனால் அதே நேரத்தில் பாஜவின் கொள்கைகளை மெகபூபா ஏற்பாரா? என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி நீர்வளத்துறை அமைச்சருமான கபில் மிஸ்ரா பாஜ தலைவர் அமித்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், காஷ்மீரில் முதல்வராக பதவியேற்க உள்ள பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, அதற்கு முன்னதாக பாரத் மாதா கீ ஜெய் என சொல்வாரா என்பது குறித்து பாஜ விளக்க வேண்டும். அவ்வாறு சொல்வதில் மெகபூபாவுக்கு நம்பிக்கை உள்ளதா? அப்படி இல்லை என்றாலும் பாஜ அவருடன் சேர்ந்து ஆட்சி அமைக்குமா? பதவி ஏற்பதற்கு முன்னதாக அவர் அப்சல் குரு ஒரு தீவிரவாதிதான், அப்சல் குரு ஒழிக என்று சொல்வாரா? நாட்டில் உள்ள தலைவர்கள் பலரையும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல வைக்க அழுத்தம் கொடுக்கும் பாஜ, காஷ்மீரின் முதல்வராக இருக்கும் மெகபூபாவை பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்வாரா என்று தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.