முத்துப்பேட்டை அருகே தடுப்புத்தூணில் மோதி மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலிதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள மருதவனத்தில் ஒரு தனியார் ரேடியோ செட் கடை உள்ளது. இதில் மீனமநல்லூரை சேர்ந்த சுரேஷ்(வயது40), மருதவனத்தை சேர்ந்த தமிழ்(25), மகேந்திரன்(32), சரவணன்(28) ஆகிய 4 பேர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமணத்திற்காக மினிலாரியில் ஒலி பெருக்கி மற்றும் மின் விளக்குகள் ஏற்றி கொண்டு ஆலங்காடு வழியாக முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். மினிலாரியை சித்தாநல்லூரை சேர்ந்த வீரசெல்வம்(28) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது நிலைத்தடுமாறி மினிலாரி சாலையோரம் உள்ள தடுப்புத்தூணில் மோதி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுரேஷ், தமிழ், மகேந்திரன், சரவணன், வீரசெல்வம், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சுரேஷ் என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால் தஞ்சாவூர் தனியார் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் வேன் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேரை மேல்சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.