இந்துத்துவ ஜாதி வெறி பிடித்தவர்கள் தண்ணீர் தர மறுத்ததால் தலித் சிறுவன் கிணற்றில் விழுந்து இறப்பு!இந்துத்துவ ஜாதி வெறி பிடித்தவர்கள் தண்ணீர் தர மறுத்ததால் தலித் சிறுவன் கிணற்றில் விழுந்து இறப்பு!

இந்துத்வா பிஜேபி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசத்தின் தாமோ நகரின் கிராமம் காமாரியா களன். இங்குள்ள பள்ளியில் தலித் சிறுவர்கள் பள்ளியின் கை பம்பை பயன்படுத்த அனுமதியில்லை. பல காலமாக இந்த தீண்டாமை இருந்து வந்துள்ளது.

இறந்து போன தலித் மாணவன் வீரனின் சகோதரன் சேவாக் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது…

 

‘நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எனது தம்பி மூன்றாம் வகுப்பு படிக்கிறான். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று எனது தம்பி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தாகத்தால் பள்ளியில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அருந்த சென்றுள்ளான். அங்குள்ள உயர் சாதி மாணவர்களும் சில ஆசிரியர்களும் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளனர். தாகம் தாங்காமல் எனது தம்பி அருகில் கிணற்றில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளான்.

 

தண்ணீர் இறைக்கும் போது சிறுவன் ஆனதால் பேலன்ஸ் தவறி கிணற்றில் விழுந்துள்ளான். சில நிமிடங்களில் அவனது உயிர் பிரிந்தது’ என்று சோகமாக சொல்கிறான் அந்த தலித் சிறுவன்.

இந்த சம்பவத்தால் கிராமம் கொதித்தெழுந்தது. அதிகாரிகள் மூன்று ஆசிரியர்களை இடை நீக்கம் செய்துள்ளனர். சென்ற செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.