மீண்டும் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார்  அதிமுகவுடன் இணைந்து சமக தேர்தலில் செயல்படும். சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் மீண்டும் இணைத்துள்ளன என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.


அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததாக சரத்குமார் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதற்குப் பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தார். விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று சரத்குமார் கூறினார். இந்நிலையில், போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று (புதன்கிழமை) சந்தித்தார் சரத்குமார்.


அதற்குப் பிறகு சரத்குமார் பேசுகையில், ''அதிமுகவுடன் இணைந்து சமக தேர்தலில் செயல்படும். சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் மீண்டும் இணைத்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார்.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.