இஸ்லாமை தேசிய மதமாக அறிவித்த வங்காளதேச அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடிமுஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசம் நாட்டில் கடந்த 1988-ம் ஆண்டு செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் வங்காளதேசத்தின் தேசிய மதமாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து அங்குள்ள பல சிறுபான்மை அமைப்புகள் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சுமார் 30 ஆண்டுகளாக இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தநிலையில், சுப்ரீம் கோர்ட் வக்கீலான சமேந்திராநாத் கோஸ்வாமி என்பவர் சமீபத்தில் ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, வங்காளதேசம் மதசார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தின் தேசிய மதமாக இஸ்லாம் எப்படி நீடிக்க முடியும்? என தனது மனுவில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கையும் ஏற்கனவே நிலுவையில் இருந்த பழைய வழக்குகளுடன் சேர்த்து விசாரித்துவந்த ஐகோர்ட் இவ்விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்தது.

இஸ்லாமை நாட்டின் தேசியமதமாக அறிவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் நைமா ஹைதர், குவாஸி ரெஸா அல் ஹக், அஷ்ரபுல் கமால் அடங்கிய ஐகோர்ட் பெஞ்ச் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற வழக்கை தொடுக்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.