சமூக வலைதளங்களில் சாதி வெறியை தூண்டும் கருத்துகளை பதிவு செய்வோர் மீது குண்டர் சட்டம்: போலீஸார் முடிவு    உடுமலை கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சாதி வெறியை தூண்டும் கருத்துகளை பதிவு செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த சங்கர் (22) என்ற தலித் இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை நடந்தபோது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியானது. அதைப் பார்த்த மக்கள் பதைபதைத்துப் போயினர்.


இதற்கிடையில், நடந்த படுகொலையை நியாயப்படுத்தி ஃபேஸ்புக்கில் சிலர் இழிவாகவும், தரக்குறைவாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கொலை சம்பவ படத்துடன், ‘ஃபீலிங் ஹேப்பி.. ஃபீலிங் ஆஸம்’ என்றும், சாதி மோதலை தூண்டும் விதமாகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


ஜெகதீஷ்குமார், மாஸ் மாரி, மருதுதேவன், சக்தி பாண்டி, சிங்கம் துரை, குரல் அரசன் என்பது போன்ற பெயர்களில் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ள சிலர் தங்கள் சாதியை உயர்வாகவும், கொலையான இளைஞரின் சாதியை தாழ்வாகவும் குறிப்பிட்டு மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது பெயர் உட்பட அனைத்து விவரங்களையும் ஃபேஸ்புக்கில் அப்பட்டமாக வெளியிட்டு சாதி மோதல்களை தூண்டும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் தவறான கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:


சமூக வலைதளங்களை தவறான நோக்கத் தில் பயன்படுத்துபவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்படுவார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.


ஒரு பெண் குறித்தும் தவறாக கூறியிருப்பதால், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும். இதுபோன்ற தவறான, முறைகேடான பதிவுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனே நீக்குவதற்கு, ஃபேஸ்புக் தலைமை நிறுவனத்துக்கு புகார் மெயில் அனுப்புகிறோம்.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.அப்படியே கல்யாணராமன் போன்றோர்மீதும் நடவடிக்கை எடுங்கப்பா....Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.