நபிகளாரை அவமதித்த மாத்ருபூமி பத்திரிகை! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டன பேரணி!கேரளாவில் இருந்து வெளிவரும் மாத்ருபூமி மலையாள நாளிதழில் இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் அடங்கிய கட்டுரை சில நாட்களுக்கு முன்னால் வெளியானது.இது முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மாத்ருபூமி பத்திரிகையின் இத்தகைய இஸ்லாம் விரோத போக்கை கண்டித்தும், கட்டுரையை வெளியிட்டதற்காக மன்னிப்புக்கோர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாத்ருபூமி அலுவலகம் நோக்கி கண்டன பேரணி நேற்று(09/03/16) நடத்தப்பட்டது.நூற்றுக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் எ.பி.அப்துல் நாஸர், இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஷத் முஹம்மது நத்வி, கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் ரவூஃப் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதனிடையே சமூக வலை தளங்களில் மாத்ருபூமி பத்திரிகைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு பரவி வருகிறது.பத்திரிகையை புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து மாத்ருபூமி சீஃப் எடிட்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக பத்திரிகையின் முதல் பக்கத்தில் மன்னிப்புக் கோரும் செய்தியை வெளியிடுவதாகவும், இந்த கட்டுரையை வெளியிட காரணமான நபர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் மாத்ருபூமி நிர்வாகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளனர்.

 

[gallery columns="1" size="full" ids="32814,32815"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.