ராமநாதபுரத்தில் பதற்றம்! இஸ்லாமிய மாணவர்களுக்கு கத்திக்குத்து! - SDPI ‪களத்தில்



ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் மண்டபத்தை சேர்ந்த இம்ரான் மற்றும் இஜாஸ் ஆகிய இரண்டு மாணவர்களை ராஜா மெட்ரிக் பள்ளியில் படிக்கும் முரளி என்ற மாணவன் மறைத்து வைத்த கத்தியால் குத்தி உள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மாணவர்களுக்கு வேகமாக சிகிச்சை அளிக்காமல் இருந்ததால் ஆத்திரத்தில் மருத்துமனையில் நடைபெற்ற தள்ளுமுள்ளுவினால் மருத்துவமனையின் கண்ணாடி உடைந்துள்ளது.


இதனால் அப்பகுதில் 144 தடை உத்தரவுப்போடப்பட்டு குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து வருகிறது காவல்துறை. இதுவரை பதினோரு அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இதனை அறிந்த SDPI கட்சியினர் உடனடியாக களத்தில் இறங்கி காவல்துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தி மேலும். யாரையும் கைது செய்யாமல் தடுத்துள்ளனர்.

இதற்கிடையில் குத்தப்பட்ட அந்த இரு மாணவர்களையும்
ராமநாதபுரம் SDPI நகரத்தலைவர் அஜ்மல் சரீஃப் அவர்களும் , நகரச்செயலாளர் ஜகபர் சாதிக் அவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

மேலும் கொலை செய்ய முயன்ற மாணவன் முரளி என்பவனை கைது செய்யக்கோரி காவல் துறையிடம் மனு கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.