திருவாரூர் அருகே டயர் வெடித்ததால் விபரீதம்: 10 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம்திருவாரூர் அருகே டயர் வெடித்து பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 10 பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

டயர் வெடித்தது

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி அருகே உள்ள அதங்குடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருடைய மகன் செந்தில். இவருக்கும், கோட்டூர் அருகே உள்ள கெழுவத்தூர் ராமாமிர்தம் மகள் லெட்சுமிக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடந்தது. இதையொட்டி கெழுவத்தூரில் பெண் வீட்டார் சார்பில் விருந்து நேற்று நடைபெற்றது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக அதங்குடியில் இருந்து நேற்று காலை ஒரு வேனில் சவுந்தர்ராஜனின் உறவினர்கள் சென்று கொண்டிருந்தனர். வேனை அதங்குடியை சேர்ந்த பாரி (வயது25) என்பவர் ஓட்டி சென்றார். வேன் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் ஒரத்தூர் வளைவில் திரும்பியபோது டயர் வெடித்தது. இதனால் தடுக்கெட்டு ஓடிய வேன் அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

25 பேர் படுகாயம்

இதில் வேனில் பயணம் செய்த 12 பெண்கள், 10 ஆண்கள், 3 குழந்தைகள் என 25 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதங்குடியை சேர்ந்த சரவணனின் மனைவி சுமதி(27) என்பவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.