முத்துப்பேட்டை "பேட்டை பள்ளிவாசல்" மீது கல்வீசிய 100 பேர் மீது வழக்குமுத்துப்பேட்டை   பேட்டை அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் திடீரென முஸ்லிம் தெரு வழியாக சென்றது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊர்வலத்தில் வந்தவர்கள் வீட்டு வாசல்களில் அமைக்கப்பட்ட தடுப்புகளை கல்வீசி உடைத்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் மீதும் கல்வீசி அதனை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஜமாத் தலைவர் நையினா முகமது முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் பேட்டையை சேர்ந்த  தர்மலிங்கம், சிவா, பாலமுருகன், அய்யப்பன், வெற்றி, அருள், சுகுமார், மதன், முரளி, விக்கி, சுமன்குமார் உள்பட 100 பேர் மீது புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் 100 பேர் தமீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

முத்துப்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து மோதல் சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் மோதல் ஏற்படுவதை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.