கயிறு தொழில் துவங்க ரூ.10 லட்சம் கடன் - திருத்துறைப்பூண்டி: கயிறு தொடர்பான தொழில் துவங்க 40 சதவீத மானியத்தில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது என்று பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி விர்ச்சு தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோருக்கான மேம்பாட்டு கழகம் சார்பில் ஊக்க தொகையுடன் 5 மாத கால இலவச கயிறு திரிக்கும் பயிற்சி எழில் நகர் ஜான் மஹாலில் நடைபெற்றது.   ஓய்வு பெற்ற கயிறு வாரிய விரிவாக்க அலுவலர் வீரராஜ் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன இயக்குனர் சேவியர் வரவேற்றார்.  சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சுரேஷ்பாபு பயிற்சியை துவக்கி வைத்தார்.

தொண்டு நிறுவன இயக்குனர் சேவியர் பேசுகையில்,  விர்ச்சு தொண்டு நிறுவனம் சார்பில் மத்திய அரசு நிதி உதவியுடன் ஏற்கனவே 25 மாற்று திறனாளிகளுக்கு கயிறு திரிக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 20 மாற்று திறனாளிகளுக்கு 5 மாத கால கயிறு திரிக்கும் இலவச பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது மாதம் ஊக்க தொகையாக ரூ 2500 வீதம் 5 மாதங்களுக்கு ஒருவருக்கு ரூ ரூ.12,500 வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு சான்றிதழும், சுய தொழில் தொடங்க மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு விர்ச்சு தொண்டு நிறுவனம் முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார்.

சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சுரேஷ்பாபு பேசுகையில், விர்ச்சு தொண்டு நிறுவனம் எங்களை அணுகும் பட்சத்தில் உங்களுக்கு தேவையான தொழில் கடன் வழங்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்றார். ஓய்வு பெற்ற கயிறு வாரிய விரிவாக்க அலுவலர் வீரராஜ் பேசுகையில், கயிறு திரிக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளது. பயிற்சி பெறும் 20 பேர் 2 குழுக்களாக  அமைத்து கயிறு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை 40 சதவீதம்  கயிறு வாரிய மானியத்துடன் கடன் பெறலாம். கயிறு பயிற்சி பெற்று உற்பத்தி செய்து சேலம், வெளி மாநிலமான கேரளா போன்ற பகுதிகளில் விற்பனை செய்யலாம்.

மேலும் கயிறு வாரியமும் நல்ல விலைக்கு பெற்றுக்கொள்ளும். கயிறு தயாரிக்கும் பயிற்சிக்கு தேவையான தேங்காய் வெள்ளை நார் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற பகுதிகளில்  கிடைக்கிறது. கயிறு தொழில் சம்பந்தமான  ஆலோசனைகள் பெற கயிறு வாரியம் தயாராக உள்ளது. மேலும் தஞ்சை கயிறு வாரிய மண்டல விரிவாக்க அலுவலகம் மற்றும் பொள்ளாச்சியில் உள்ள கயிறு வாரிய மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும் தஞசை கயிறு வாரிய மண்டல விரிவாக்க அலுவலக தொலைபேசி எண் 04362&264655 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார். பயிற்றுனர் வாணிஸ்ரீ, சிறப்பாசிரியர் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி  ஒருங்கிணைபாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.