ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி கருணாநிதிக்கு ரூ.62.99 கோடி சொத்து - பாவம் எல்லோரும் நம்பிருங்கோ!!!...தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களுடன் தேர்தல் விதிமுறைப்படி தங்கள் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில், முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு 118.58 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.63 கோடிக்கும், அசையா சொத்துக்கள் ரூ.76.95 கோடிக்கும் இருப்பதாக கூறியுள்ள அவர், தனது பெயரில் ரூ.2.04 கோடிக்கு வங்கிக் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் பெயரிலும், தன் மனைவியர் பெயரிலும் மொத்தம் ரூ.62.99 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில், கருணாநிதி, அவரது மனைவியர்களான தயாளு, ராசாத்தி ஆகியோர் பெயர்களில் அசையும் சொத்து ரூ.58.77 கோடிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியர் பெயர்களில் ரூ.4.21 கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளன. கருணாநிதி பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. அவர் பெயரில் கார்கள், நிலங்கள், வங்கிக் கடன் எதுவும் இல்லை. ராசாத்தி பெயரில் 11.94 கோடி ரூபாய் வங்கிக் கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.