திருவாரூரில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை எரிக்க முயற்சி இந்துமக்கள் கட்சியினர் 12 பேர் கைதுதிருவாரூரில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தீ வைத்து எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் அறிக்கை

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவில் நிலங்களிலிருந்து அரசுக்கு வந்து சேர வேண்டிய குத்தகையை காலம் தவறாமல் முறைப்படுத்தி வசூல் செய்திடவும், கோவில்களுக்கு சொந்தமான காலி இடங்களை பாதுகாத்து, வருவாய் பெற்றிட நிலவங்கி நிறுவப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. மேலும் நீண்டகாலமாக கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், தங்களுக்கு மனையை கிரயம் செய்¢து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிக்க முயற்சி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தி.மு.க. தேர்தல் அறிக்கை எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் மேலகோபுரவாசல் முன்பு இ¢ந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தீ வைத்து எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், நாகை மாவட்ட தலைவர் விஜயேந்திரன் உள்பட 12 பேரை கைது செய்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, திருவாரூரில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை இந்து மக்கள் கட்சியினர் எரிக்க முயன்றதால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.