பட்டுக்கோட்டை நகைக்கடையில் 125 பவுன் மோசடிபட்டுக்கோட்டை பெரியகடைத்தெருவில் நகைக்கடை வைத்து இருப்பவர் சுந்தரபாண்டியன். இவருடைய கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பிரவீன். பட்டுக்கோட்டை தேரடித் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சுந்தரபாண்டியனின் நகைக்கடையில் நகைகளை வாங்கி வெளியில் விற்று அதற்கான பணத்தை கொடுப்பது வழக்கம்.

அதன்படி சம்பவத்தன்று ராஜேந்திரன் நகைக்கடை மேலாளர் பிரவீனிடம் வந்து நெக்லஸ், ஆரம், சங்கிலி உள்பட 125 பவுன் நகைகளை விற்பதற்காக வாங்கி சென்றார். ஆனால் அவர் நகைகளை விற்றுவிட்டு அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் ராஜேந்திரன் நகைகளை விற்ற பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை.

இதையடுத்து நகைக்கடை மேலாளர் பிரவீன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.