திமுக வேட்பாளர் பட்டியலும் கவனிக்கத்தக்க 15 அம்சங்களும்சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

* திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

* திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

* ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக மகளிர் பிரச்சார அணிச் செயலாளர் சிம்லா முத்துச்சோழன் (35) போட்டியிடுகிறார். இவர், திமுக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி. சற்குண பாண்டியனின் மருமகள்.

விரிவான செய்திக்கு - ஆர்.கே.நகரில் ஜெ.வை எதிர்க்கும் சிம்லா முத்துச்சோழன்

* திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் - காட்பாடி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி - ஆத்தூர், வி.பி.துரைசாமி - ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

* கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், கே.பி.பி.சாமி, தா.மோ.அன்பரசன், துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உ.மதிவாணன், கே.ஆர்.பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, டி.பி.எம்.மைதீன்கான், சுரேஷ்ராஜன் உள்ளிட்ட 18 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* கடந்த 2011 தேர்தலில் வென்ற 23 எம்எல்ஏக்களில் புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர்கள் கே.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.

* க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, என்.செல்வராஜ், தமிழரசி, கோ.சி.மணி, உபயதுல்லா, பொங்கலூர் பழனிசாமி உட்பட 9 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. திமுகவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநகரச் செயலாளர்கள் என மொத்தம் 70 பேர் உள்ளனர். இவர்களில் 25 மாவட்டச் செயலாளர்கள், 4 மாநகரச் செயலாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

* சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் - அம்பாசமுத் திரம், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி - ராசிபுரம் (தனி), சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

* மொத்தமுள்ள 173 வேட்பாளர்களில் 19 பேர் பெண்கள். கடந்த 2011 தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. | சற்றே விரிவாக > திமுகவில் 19 பெண்கள் போட்டி

* சா.மு.நாசர் - ஆவடி, பா.மு.முபாரக் - குன்னூர், ம.பஷீர் அகமது - திண்டுக்கல், டி.பி.எம்.மைதீன் கான் - பாளையங்கோட்டை, கே.எஸ்.மஸ்தான் - செஞ்சி என 5 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போடிநாயக் கனூரில் எஸ். லட்சுமணன், ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒரத்தநாட்டில் அமைச்சர் ஆர்.வைத்தி லிங்கத்தை எதிர்த்து எஸ்.எஸ்.ராஜ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

* கடந்த 2011 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 119 பேரில் 50 பேருக்கு வாய்ப்பு தரவில்லை.

* கருணாநிதி - ஸ்டாலின், ஐ.பெரியசாமி - செந்தில்குமார் என தந்தை மகனும் களத்தில் உள்ளனர்.

* திமுக வேட்பாளர் பட்டியலில் மக்கள் தேமுதிக நீங்கலாக மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் 22 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது திமுக வட்டாரத்தில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு > மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்து காலூன்றிய 22 பேருக்கு திமுகவில் வாய்ப்பு: ஆதங்கப்படும் திமுக வட்டாரம்

* திமுக வேட்பாளர் பட்டியலில் 25 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.