இந்தியாவிலேயே முதல்முறையாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் முதல் சூப்பர் பாஸ்ட் ரயில் அறிமுகம்இந்தியாவிலேயே முதல்முறையாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் முதல் சூப்பர் பாஸ்ட் ரயில் வரும் ஐந்தாம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. டெல்லி- தாஜ் மஹால் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரை இணைக்கும் வகையில் இந்த ரயில் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. ’டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலை வரும் ஐந்தாம் தேதி காலை 10 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்படும். ரெயில்வேத்துறை மந்திரி சுரேஷ் பிரபு கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.

முழுமையான ஏ.சி. வசதியுடன் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இந்த ரயில், டெல்லி-ஆக்ரா இடையிலான சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை நூறு நிமிடங்களுக்குள் கடந்து காலை 11.40 மணியளவில் ஆக்ராவில் உள்ள கண்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும். பின்னர், மாலை 5.50 மணிக்கு ஆக்ராவில் உள்ள கண்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு டெல்லி சென்றடையும். இதேபோல், வெள்ளிக்கிழமை நீங்கலாக, வாரத்தின் ஆறுநாட்கள் டெல்லி நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, 9.50 மணிக்கு ஆக்ராவில் உள்ள கண்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும்.இதர சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தைவிட இந்த ’டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ ரெயிலின் கட்டணம் 25 சதவீதம் அதிகமாக இருக்கும். இந்த ரயிலில் உள்ள உணவகத்தில் கோதுமை உப்புமா, மினிதோசை, காஞ்சிபுரம் இட்லி, பழவகைகள், சிக்கன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.