இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.


இதற்காக, தேசிய பாதுகாப்பு நிதி (National Defense Fund) என்ற பெயரில் நிதி வழங்கிடும்படி அன்றைய குறுநில மன்னர்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

நிதி நெருக்கடியால் பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார்.

இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார், லால் பகதூர் சாஸ்திரி.

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நேரில் சென்று சந்தித்தவர், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).

ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நாட்டின் மோசமான நிதி நிலைமையை விளக்கினார்.

கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம், மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார்.

தனது கருவூலத்திலிருந்து 'ஐந்து டன்' எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார்.

(நிஜாம் வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600
கோடிகளுக்கும் மேல்)

பாதுகாப்பு நிதி கேட்டால், தனது சொத்தின் பெரும் பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு, மற்ற குறுநில மன்னர்களிடம் பரவி பெரும் சர்ச்சையானது.

இன்றைய தேதிவரை, இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ - ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த்திகழ்ந்த ஹைதராபாதின் கடைசி நிஜாம், 24-02-1967அன்று காலமானார்.

இது[போன்ற வரலாறுகளை தான் இன்றைய பாஜக அரசு, மறைக்க பார்க்கிறது, இவைகளை தீயிட்டு கொளுத்திவிட்டு, வரலாறுகளை திரிக்கப்பார்க்கிறது.

 

நன்றி :
Maruppu - மறுப்பு

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.