டெல்லியில் 17 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம்: தந்தை கைது -வீடியோடெல்லியில் கடந்த திங்கள் கிழமை இரவு சொகுசு கார் ஒன்றை வேகமாக ஓட்டி வந்து சாலையில் சென்றவர் மீது மோதி அவரை உயிரிழக்கச்செய்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனின் தந்தை நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.


புதுடெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில், கடந்த திங்கள் கிழமை   சித்தார்த்தா சர்மா(32 வயது) வணிக ஆலோசகர் சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் மோதியதில் உயிரிழந்தார்.


அந்த வெளிநாட்டுக் காரை ஓட்டி வந்தது, பிரபல தொழிலதிபர் ஒருவரின், 17 வயது மகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து   மறுநாளே கைது செய்யப்பட்ட போதிலும், 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் உடனடியாக ஜாமீனில் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.  இதனால், ஆத்திரம் அடைந்த விபத்தில் பலியானவரின் குடும்பத்தினர்,  குற்றவாளிகள் மீது மென்மையாக போலீஸ் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த நிலையில், நேற்று அதிரடியாக நடவடிக்கையை மேற்கொண்ட டெல்லி போலீசார், விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பிரிவையும் மாற்றி, சிறுவனின் தந்தை அகர்வாலை கைது செய்தனர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.