அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 175 மாணவ, மாணவிகள் பங்கேற்பு !தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் மாணவ, மாணவிகள் 27 பேர் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மையம் சார்பில் நடந்த வளாக வேலைவாய்ப்பு தேர்வு மற்றும் நேர்காணல் கல்லூரியில் நேற்று ஏப்-4 ல் நடந்தது. இதில் அமெரிக்கா டலாஸ், டெக்ஸாஸ், ஆகிய மகாணங்களில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருச்சி ஐடியூஆர்ஏ டிசைன்ஸ் சிஸ்டம் என்ற நிறுவனம் தேர்வு நடத்தியது. இதில் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் 175 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 43 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்று இறுதியில் 27 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.

வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர். முகாம் ஏற்பாட்டை கல்லூரி தொழில் வழிகாட்டி மையத்தின் அமைப்பாளர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஏற்பாடு செய்தனர்.

 

f6754003-5a8e-4dbf-a118-6574187a87e7 db916f47-b620-4499-9cd1-c35d3ec29b38 (1) 310eeed7-23c0-4088-ba3f-a6bc4ae11f94
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.