அதிர்ச்சி தகவல் - உலக அளவில் அதிக சாலை விபத்து! சென்னைக்கு 2வது இடம்!உலகிலேயே விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடம் பெற்றுள்ளது. உலகில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்தில் இறக்கின்றனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகம் விபத்து நடக்கும் இரண்டாவது நகராக சென்னை இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்கள் முறையே 23, 24வது இடத்தை பெற்றுள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சென்னை வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.