மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது த.மா.கா.: 25 தொகுதிகள் ஒதுக்க முடிவுமக்கள் நலக் கூட்டணியில் தமிழ்நாடு மாநில காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஜி.கே.வாசன் உடன் வைகோ உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. த.மா.கா வுக்கு 25 தொகுதிகளையும் தேமுதிக தர சம்மதம் தெரிவித்துள்ளது. த.மா.கா. உள்பட மக்கள் நலக் கூட்டணி அணியின் தொகுதி பங்கீட்டை மாலையில் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக ஓரங்கட்டியதால் குழம்பிக் கிடந்த தமிழ்நாடு மாநில காங்கிரசுக்கு சிறு ஆறுதல் கிடைத்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி உடன் சேர்ந்ததால் கட்சி கரைவதை தடுத்து நிறுத்திவிடலாம் என வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில காங்கிரசில் உள்ள நிர்வாகிகள் மக்கள் நலக் கூட்டணி அணியை ஏற்பார்களா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.