சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சட்டத்தில் 25 சத ஒதுக்கீடு வழங்க நடவடிக்கைதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் (பொ)கஸ்தூரிபாய் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)கஸ்தூரிபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைசட்டம் 2009ன் படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டினை நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சேர்வதற்கு உரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 18ம் தேதி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படாத மாணவர்களின் பெயர் பட்டியல் பள்ளியின் அறிவிப்பு பலகையில்  20ம் தேதி வெளியிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக விண்ணப்பங்களை பள்ளிகள் பெறப்பட்டிருப்பின் 23ம் தேதி காலை 10.30 மணியளவில் பெற்றோர் முன்னிலையில் குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

அவ்வாறு 25 சதவீத சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல்  பள்ளி தகவல் பலகையில் அன்று மதியம் 2 மணியளவில் வெளியிடப்படும். மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நுழைவு நிலை (எல்.கே.ஜி) வகுப்பில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 3,300 ஆகும். நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை 838 ஆகும்.

சேர்க்கை விண்ணப்பங்கள் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலங்களிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இந்தவிபரம் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்(பொ) கஸ்தூரிபாய் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.