முத்துப்பேட்டை அருகே விவசாயி கொலை 2 பேர் கைதுமுத்துப்பேட்டை அருகே மனைவியிடம் குடிபோதையில் தகராறு செய்த விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியிடம் தகராறு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வீரன்வயலை சேர்ந்தவர் சிவசங்கரன்(வயது49). விவசாயி. இவருடைய மனைவி பானுமதி (44). இந்தநிலையில் சிவசங்கரன் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதை பார்த்த பானுமதியின் உறவினர்கள் செந்தில்குமார், நடராஜன், குணசேகரன் ஆகிய 3 பேரும் சிவசங்கரனை கண்டித்தனர். ஆனால் சிவசங்கரன் இதை பொருட்படுத்தாமல் மீண்டும் அவர் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பானுமதி மற்றும் உறவினர் 3 பேரும் சேர்ந்து சிவசங்கரனை கையால் தாக்கி கீழே தள்ளினர். இதில் படுகாயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சிவசங்கரன் இறந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், பானுமதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நடராஜன், குணசேகரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.