2 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் ரத்து?...- மத்திய அமைச்சர்!இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ள குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் ராகேஷ் சின்ஹா பேசும்போது, ''உலகின் பல நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்ததால் கலாசாரப் பண்புகள் சீர்குலைந்து விட்டன. அதனால், நமது நாட்டின் கலாசாரப் பண்புகளைக் காப்பாற்றுவதற்கு ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உணவுப் பொருள், பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசும்போது, "தாரூல் உலூம் தேவ்பந்த்' அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள், "பாரத மாதா கீ ஜே' என்ற முழக்கத்தைக் கூறுவதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக, பயங்கரவாதத்துக்கு எதிராக அவர்கள் தடை விதித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

சமீபத்தில் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) துரதிருஷ்டவசமாக, தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்த நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் (காங்கிரஸ்), ஜே.என்.யு.வில் தேச விரோத முழக்கங்களை எழுப்பிய சக்திகளுக்கு ஆதரவு அளித்தனர்.

மேலும், நமது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது கவலையளிக்கிறது. அதனால், இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். அப்படி அவர்களுக்கு அரசின் சலுகைகள் அளிக்கப்பட்டு இருந்தால் அதனை திரும்பப் பெறப்பட வேண்டும்" என்றார்.

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் இந்த கருத்து தற்போது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.