முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பை கிடங்கில் 2வது நாளாக தீமுத்துப்பேட்டை  பேரூராட்சி குப்பை கிடங்கில் 2 நாளாக எரிந்து கொண்டி தீ அணைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஆலங்காடு சுடுகாடு அருகே உள்ளது. இங்கு தான் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சமீபகாலமாக தனித்தனியாக பிரிப்பது கிடையாது. இதனால் உரம் தயாரிக்கும் பணியையும் செய்வது கிடையாது. மேலும் இந்த குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் அவ்வபோது கொளுத்தி விடுவர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் தெரியாத அளவுக்கு ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. நேற்று முன்தினம் மாலை வரை முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதையடுத்து இரவு முழுவதும் விடிய விடிய பலமுறை தீயணைப்பு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து தொடர்ந்து நேற்று காலை வரை தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது இடைவிடாமல் தீயணைப்பு பணியில் ஈடுபட்டதால் முத்துப்பேட்டை தீயணைப்பு வாகனம் பழுதடைந்தது. பின்னர் கடைசி நேரத்தில் அருகில் உள்ள வெள்ள குளத்திலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தீயை அணைத்தனர். பிறகு பேரூராட்சி மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு அணைக்கப்பட்ட குப்பைகளை அருகில் இருந்த காலி இடத்துக்கு குப்பைகளை மாற்றியமைக்கும் பணி நடக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.