பெண்ணிடம் நூதன முறையில் 46 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சுதிருவாரூரில் பெண்ணிடம் நூதன முறையில் 46 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி
தஞ்சாவூர் தொம்பன்குடிசை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது60). இவர் ரெயில்வே துறையில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு காரைக்காலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஜெயபால், தனது மனைவி கிருஷ்ணவேணி, மருமகள் சுபா ஆகியோருடன் ஒரு காரில் தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தார். திருவாரூர் வந்தபோது கமலாலயம் குளம் வடகரையில் உள்ள ஒரு ஓட்டலில் காப்பி குடிப்பதற்காக காரை நிறுத்தினார். உடல் நிலை சரியில்லாததால் கிருஷ்ணவேணி மட்டும் காரிலேயே இருந்தார். மற்ற அனைவரும் ஓட்டலுக்கு சென்றனர்.

காரில் தனியாக இருந்த கிருஷ்ணவேணியிடம், அங்கு வந்த ஒரு மர்ம நபர் ஒருவர் வெளியே பணம் சிதறி கிடப்பதாக கூறி உள்ளார். இதை உண்மை என நம்பி கிருஷ்ணவேணி கார் கதவை திறந்து பார்த்தார். இந்த சந்தர்ப்பத்தில் காரின் மற்றொரு பக்கத்தின் கதவை திறந்து சீட்டில் வைத்திருந்த பையை அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் திருடி கொண்டு தப்பி ஓடினர். அந்த பையில் 46 பவுன் தங்க நகைகள் இருந்தன.

வலைவீச்சு
இதுகுறித்து ஜெயபால் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சார்லஸ்நெப்போலியன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் தனியாக இருந்த பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.