கலெக்டரிடம் மனு கொடுக்க வாகனங்களில் சென்ற 55 இஸ்லாமியர் கைதுகலெக்டரிடம் மனு அளிக்க வாகனங்களில் சென்ற மதுக்கூரை சேர்ந்த இஸ்லாமியர்கள் 55 பேரை ஒரத்தநாட்டில் போலீசார் கைது செய்தனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரை சேர்ந்தவர் மைதீன் (35). இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்  கடந்த 10 நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மைதீன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாக கூறி இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பை சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர்சாதிக் தலைமையில் இஸ்லாமியர்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக நேற்று வேன் மற்றும் ஆட்டோக்களில் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர். இதுபற்றி தகவலறிந்த டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார்  ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் வாகனங்களை மறித்து  55 பேரை கைது செய்தனர்.

 

 

Thanks To DINAKARAN
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.