"SDPI கட்சிக்கு சீட் இல்லை" கூட்டணிக் கட்சிகளுக்கு 58 சீட்.. 176 இடங்களில் போட்டியிடுகிறது திமுக



திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு 58 இடங்களை ஒதுக்கியுள்ளதால், அக்கட்சி 176 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. சட்டசபைத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட் அகட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, காங்கிரஸிற்கு 41 தொகுதிகளும், ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்தத் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், திமுக 176 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.