பிச்சைக்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம் லாட்டரியில் ரூ.65 லட்சம் பரிசுஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொன்னையா (35). இவர் கல் குவாரியில் பணிபுரிந்து வந்த இவர், தவறி கீழே விழுந்ததில் அவர் தனது கால்களை இழக்க நேர்ந்தது. இந்நிலையில் மாற்றுத்திறனாளியான பொன்னையா குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னியாகுமரி பகுதியில் பல இடங்களில் பிச்சை எடுத்துவந்தார்.

கடந்த 30-ம் தேதி கேரள மாநிலம் பனச்சமூடு பகுதியில் பிச்சை எடுத்த அவர், ரூ.30-க்கு லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார். அதில் தான் அவருக்குக் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. பொன்னையா வாங்கிய லாட்டரிச்சீட்டில் ரூ.65 லடசம் பரிசு விழுந்தது.

பின்னர், லாட்டரிச் சீட்டை விற்றவர்கள் வாங்கிய நபரை தேடிக் கண்டுபிடித்தனர். அவருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் அவரது உறவினரின் கணக்கு மூலம் பரிசுப் பணத்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.