மன்னார்குடி ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்புமன்னார்குடி ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வழி அனுப்ப சென்றார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பழைய தஞ்சாவூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது53). இவர்களுடைய மகள் வைஷ்ணவி (23). இவர் சென்னையில் பொதுப்பணித்துறை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வைஷ்ணவி விடுமுறையில் ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு வைஷ்ணவி தனது தாய் கலைச்செல்வியுடன் மன்னார்குடி ரெயில் நிலையம் சென்றார்.

அங்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைஷ்ணவியை ஏற்றிவிட்ட கலைச்செல்வி ரெயில் புறப்படும் வரை அவருடன் பேசி கொண்டிருந்தார். பின்னர் ரெயில் புறப்பட்டதும் வீட்டுக்கு செல்வதற்காக நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர், கலைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். தங்க சங்கிலியை பறித்ததில் நிலை தடுமாறிய கலைச்செல்வி கீழே விழுந்தார்.

ரெயிலில் இருந்து குதித்தார்

தாய் கீழே விழுந்ததை பார்த்த அதிர்ச்சியில் வைஷ்ணவி ஓடும் ரெயிலில் இருந்து நடைமேடையில் குதித்தார். இதில் வைஷ்ணவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மன்னார்குடி ரெயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன், தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.