8 பேருக்கு மரண தண்டனைமேற்கு வங்காள மாநிலத்தில், மாணவரை கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு வங்காள மாநிலம் பாமன்காச்சி என்ற இடத்தில், சட்டவிரோத மது மற்றும் போதை மருந்துக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர் சவுரப் சவுத்ரி, கடந்த 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

சவுரவ் சௌத்ரி(21) சடலம் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

பராசத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இந்த கொலை தொடர்பான வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டனர். அதில், முதன்மை குற்றவாளியான சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கருதப்பட்ட ஷியாமல் கர்மார்கரும் ஒருவர். ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஷியாமல் கர்மாகர், சுமன் சர்க்கார், சுமன் தாஸ், அமல் பரூய், சோம்நாத் சர்தார், தபஸ் பிஸ்வாஸ், ரத்தன் சமதர் மற்றும் தரக் தாஸ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகேஷ் பர்மன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், அடுத்தகட்டமாக மேல் நீதிமன்றங்களில் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.