9 பேரை கொன்ற ‘சுள்ளி கொம்பன்’ யானை மரக்கூண்டில் அடைப்பு.- பொதுமக்கள் நிம்மதிபந்தலூர் அருகே மோங்கோரஞ்ச் தனியார் தேயிலை தோட்ட பகுதியில் கடந்த 1ம் தேதி இரண்டு தொழிலாளர்களை யானை தாக்கி  கொன்றது. யானை தாக்கி தொழிலாளர் பலியாகும் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலை  மறியல்,கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சுள்ளி கொம்பன் என்ற யானை இதுவரை 9 பேரை கொன்றுள்ளது. இந்த யானையை  சுட்டு பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரை வலியுறுத்தினர்.ஆட்கொல்லி யானையை கண்காணித்து பிடிக்கும் பணியில்  வனத்துறையினர் ஈடுபட்டனர். தலைமை வனஉயிரின பாதுகாவலர் மல்கானி மேற்பார்வையில் மண்டல வன பாதுகாவலர் அன்வரூதின் மாவட்ட  வன அலுவலர் தேஜஸ்வீ தலைமையில் கால்நடை மருத்துவர்கள், முதுமலை புலிகள் காப்பக பணியாளர்கள், பந்தலூர், பிதர்காடு, சேரம்பாடி மற்றும்  கூடலூர் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டது.

இந்த குழு கடந்த நான்கு நாட்களாக சுள்ளி கொம்பன் யானையை பிடிக்க கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சேரம்பாடி அரசு  தேயிலை தோட்டம் சரகம் 1 பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுள்ளி கொம்பன் யானை வேறு இரண்டு யானைகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.
முதற்கட்டமாக யானைக்கு மயக்க ஊசி போடுவதற்கு தயாராகும் போது யானை முட்புதருக்குள் சென்றது. அதன்பின் வனத்துறையினர் யானையை  சாதகமான பகுதிக்கு விரட்டி நேற்றுமுன்திம் மாலை 4 மணியளவில் சுள்ளி கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

Daily_News_8555980920792

அதன்பின் 3 யானை ஓரே இடத்தில் இருந்ததால் பொம்மன், உதயன் மற்றும் சுஜய் ஆகிய முன்று மகும்கி யானைகள் சம்பவ இடத்திற்கு  வரவழைக்கப்பட்டு சுல்லி கொம்பன் யானையுடன் இருந்த இரண்டு யானைகளையும் விரட்டினர். அதன்பின் கும்கி யானைகளை வைத்து கயிறு  மற்றும் சங்கிலிகளால் கட்டி லாரியில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது, மீண்டும் முரண்டு பிடித்த சுள்ளி கொம்பனுக்கு இரண்டாவது முறையாக  மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன்பின் கும்கி யானைகளை வைத்து யானையை கொண்டு லாரியில் முதுமலைக்கு கொண்டு செல்ல ஏற்ற  முயற்சித்தனர்.

ஆனால் மூன்று கும்கி யானைகளையும் தள்ளி விட்டு வனப்பகுதிக்கு செல்ல முயற்சித்த யானையை எட்டு மணிநேரம் போராட்டத்திற்கு பின் இரவு  12 மணிக்கு யானையை லாரிக்குள் ஏற்றினர். இதில் சுல்லி கொம்பன் உடலில் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு கால்நடை  மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து லாரியில் ஏற்றிய ஆட்கொல்லி யானையான சுல்லி கொம்பனை முதுமலை தெப்பக்காடு பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்ட கிரால் எனப்படும் மரக்கூட்டில் அடைத்தனர். 9 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை பிடித்து சென்றதால் அப்பகுதி  பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனர்.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.